காணொளி: சம்பளப் பாக்கி; ரூ.24 கோடி மதிப்பிலான பொருட்களுக்கு தீ வைத்த ஊழியர்

காணொளிக் குறிப்பு, சம்பளப் பாக்கி: ரூ.24 கோடி மதிப்பிலான பொருட்களுக்கு தீ வைத்த ஊழியர்
காணொளி: சம்பளப் பாக்கி; ரூ.24 கோடி மதிப்பிலான பொருட்களுக்கு தீ வைத்த ஊழியர்
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தின் சூரத் நகரில் செப்டம்பர் 9-ஆம் தேதி இரவு ஜவுளிச் சந்தை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 24 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் இது விபத்து என்று கருதப்பட்ட நிலையில், பின்னர் காவல்துறை நடத்திய விசாரணையில் தீ வேண்டுமென்றே வைக்கப்பட்டது தெரியவந்தது.

காவல்துறையின் கூற்றுப்படி, வினோத் சாவ்லேவின் முதலாளி, அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் தவறுகளைக் கண்டுபிடித்து அவரைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஒரு மாதத்துக்கு முன்பு வினோத் சாவலே வேலையை விட்டு நின்றுள்ளார். நிலுவையில் இருந்த சம்பளம் தொடர்பாகவும் அவருக்கும் முதலாளிக்கும் இடையே தகராறு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரணத்தால் வினோத் சாவ்லே ஷியாம் சாங்கினி ஜவுளிச் சந்தைக்குத் தீ வைத்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் கண்ட காவல்துறையினர், அவரைக் கைது செய்துள்ளனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு