சென்னையில் பைக் சாகசம் - 16 பேர் கைது, 11 வாகனங்கள் பறிமுதல்
சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில், அக்டோபர் 4ஆம் தேதி அதிகாலையில் இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கி சாகசத்தில் ஈடுபட்டனர்.
ஹெல்மெட் அணியாமலும், வாகன எண் பலகை இல்லாமலும் பலர் அதீத சத்தத்துடன் வாகனங்களை இயக்கினர்.
இதனால் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த சம்பவம், தொடர்பாக போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விசாரணையின் அடிப்படையில், சாகசத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிறார்களாக இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் பெற்றோர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதேபோல், இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



