சூரிய ஆற்றல் மூலம் பால் பண்ணைத் தொழிலில் சாதிக்கும் பெண்கள்
மகாராஷ்டிராவின் தாராஷிவ் மற்றும் லத்தூர் மாவட்டங்களில் ஏறக்குறைய 100 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 100 பெண்கள் சூரிய ஆற்றலில் இயங்கும் பால் சேகரிப்பு மையங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த பால் பண்ணை முயற்சியின் மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், விவசாயிகள் வழங்கும் பாலுக்கான கட்டணம், அவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
மராத்வாடாவின் வறட்சிக்கு உள்ளாகக்கூடிய இந்தப் பகுதியில், பால் பண்ணைத் தொழில் விவசாயிகளுக்கு ஒரு கூடுதல் வருமான ஆதாரமாக திகழ்கிறது. இந்த முன்னெடுப்பானது, சிஎஸ்ஆர் (CSR) ஆதரவின் மூலம், 'ஸ்வயம் சிக்ஷன் பிரயோக்' (Swayam Shikshan Prayog) எனும் அமைப்பால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தப் பால் பண்ணைகள் வேலைவாய்ப்பை அளித்ததோடு மட்டுமில்லாமல், தங்கள் வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளதாக பெண்கள் கூறுகின்றனர். அவர்களின் கதை என்ன? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



