காணொளி: ஃப்ளைதுபை விமான சம்பவத்தில் உதவிய பயணியை பாராட்டிய நெதன்யாகு

காணொளிக் குறிப்பு, ஃப்ளைதுபை விமான சம்பவத்தில் உதவிய பயணியை பாராட்டிய நெதன்யாகு
காணொளி: ஃப்ளைதுபை விமான சம்பவத்தில் உதவிய பயணியை பாராட்டிய நெதன்யாகு
பிரசுரிக்கப்பட்டது

துபையில் இருந்து டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்ட ஃப்ளைதுபை பயணிகள் விமானத்தில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தின்போது தலையிட்டு உதவியநபரை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் பாராட்டியுள்ளார்.

செப்டம்பர் 30, 2026 அன்று ஃப்ளைதுபை(FZ1073) விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் ஓமானி நாட்டைச் சேர்ந்த துணை விமானி திடீரென முதன்மை விமானியைத் தாக்கிவிட்டு, விமானத்தைக் கீழே செலுத்தி விபத்துக்குள்ளாக்க முயன்றார். விமானம் மிக வேகமாக கீழ்நோக்கிச் சரிந்தபோது, யானிவ் என்ற இஸ்ரேலியப் பயணி மற்றும் சில பயணிகள் துணிச்சலாக விமானி அறைக்குள் புகுந்து, தாக்குதல் நடத்திய துணை விமானியை மடக்கிப் பிடித்துக் கட்டுப்படுத்தினர். படுகாயமடைந்த நிலையிலும் கட்டுப்பாட்டை மீட்க உதவிய இந்திய முதன்மை விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் வீரத்தையும் பிரதமர் நெதன்யாகு வெகுவாகப் பாராட்டினார். டெல் அவிவ் பென் குரியன் விமான நிலையத்திற்குப் பயணிகள் பாதுகாப்பாகத் திரும்பியதும், ரத்தக் கறை படிந்த ஆடைகளுடன் இருந்த பயணி யானிவை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேரில் கட்டிப்பிடித்து பாராட்டினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு