பள்ளத்தில் கவிழ்ந்த வேன் - மூவர் உயிரிழப்பு; 21 பேர் காயம்
பள்ளத்தில் கவிழ்ந்த வேன் - மூவர் உயிரிழப்பு; 21 பேர் காயம்
பிரசுரிக்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் – பழனி மலைப்பாதையில் சவரிக்காடு அருகே 24 பேர் பயணித்த சுற்றுலா வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர், உள்ளூர் மக்கள் உதவியுடன் மலைப்பாதையிலிருந்து கயிறுகளைக் கட்டிப் பள்ளத்தில் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பழனி மதினா நகரைச் சேர்ந்த நிஜாமுதீன், ஷேக் பரீத், அப்பாஸ் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் காயமடைந்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



