மாதம் ரூ.6 லட்சம் வரை வருமானம் ஈட்டித் தரும் 'கிர்' காளை
மாத வருமானம் சுமார் 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை ஈட்டித் தரும் இந்தக் காளையின் பெயர் பீஷ்மா. புஷ்கர் மேளாவில் வெறும் காட்சிக்காக மட்டுமே இது கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் விந்துகளை விற்பதில் மாசம் 5 முதல் 6 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. நல்ல அளவில் விந்து விற்பனை நடக்கிறது.
எங்களுக்கு இது மிகவும் விலைமதிப்பற்றது, அதனால் இதை விற்பதற்கு எந்த விலையும் சொல்வதில்லை. ஏனென்ன்றால் இதிலிருந்து எங்களுக்கு மாத வருமானமே 5 முதல் 6 லட்சம் ரூபாய் வருகிறது. அதனால் வேறு யாரும் இதை வாங்க முடியாது.
கிர் இன மாடுகளுக்கு பல சிறப்புகள் உள்ளன. இது ஒரு நாட்டு இனம். இது இனப்பெருக்கத்தில் சிறந்தது. இயல்பாகவே சாந்தமான குணம் கொண்டது.
இந்த காளையின் தனித்துவமான விஷயங்களை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது பாவ்நகர் பரம்பரையைச் சேர்ந்தது; இதன் நிறத்தை 'காப்ரோ லீல்டோ'என அழைப்பார்கள். இந்த நிறத்தில் இந்தத் தரத்தில், இந்த அழகில் ரொம்பக் குறைவான காளைகள்தான் இருக்கும்.
இதன் சிறப்பு என்னவென்றால், கிர் இனத்தை உருவாக்க வேண்டுமென்றால் நல்ல காளைக் கன்றுகளையும் உற்பத்தி செய்யக்கூடிய காளை இது.
தீவனத்தை பொறுத்தவரை இயற்கையாகவே மேய்ச்சலுக்கு செல்லும். அதோட இதன் தீவனத்தில் அஸ்வகந்தா, சதாவரி, ஒயிட் முஸ்லி மாதிரியான விஷயங்களை சேர்ப்போம்.
இந்தத் தீவனம் கொடுக்கும் விஷயத்தில் நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன். நாம் ஏதோ ஒன்று செய்து சம்பாதித்து இதற்கு கொடுக்கிறோம் என்பது இல்லை. இதன் ஆசீர்வாதத்தால்தான் நாங்கள் சாப்பிடுகிறோம் என நம்பி, இந்தப் பசுக்களையும் காளையையும் பராமரிக்கிறோம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



