'முறையான அலுவலகம் இல்லை, ஆனால் கோடிகளில் நன்கொடை' - 'லெட்டர்பேடு' கட்சிகளில் என்ன நடக்கிறது? பிபிசி புலனாய்வு

காணொளிக் குறிப்பு, 'முறையான கட்சி அலுவலகம் இல்லை, ஆனால் கோடிகளில் நன்கொடை' - பிபிசி புலனாய்வில் தெரிய வந்தது என்ன?
'முறையான அலுவலகம் இல்லை, ஆனால் கோடிகளில் நன்கொடை' - 'லெட்டர்பேடு' கட்சிகளில் என்ன நடக்கிறது? பிபிசி புலனாய்வு
பிரசுரிக்கப்பட்டது

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய அரசியலில் ஒரு பெரும் திருப்பம் ஏற்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 எம்.பி.க்கள் அக்கட்சியிலிருந்து விலகி, என்சிபிஐ என்ற சிறிய கட்சியில் இணைந்தனர்.

இந்த 20 எம்பிக்களையும் தகுதி நீக்கம் செய்ய கோரும் மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. என்சிபிஐ தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல. இந்த நிலையில் இந்திய அரசியல் கட்சிகள் மற்றூம் தேர்தல் நன்கொடை ஆகியவை குறித்து பிபிசி புலனாய்வு மேற்கொண்டது.

பிபிசியின் புலனாய்வு என்சிபிஐ குறித்து அல்ல. அதிக அளவில் நன்கொடைகளைப் பெற்ற பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் ஆறு குறித்து பிபிசி ஆய்வு செய்தது.

பெரும்பாலான விவகாரங்களில், வெளிப்படைத்தன்மை குறைவாக இருப்பதை தெரியவந்தது. எனினும், எந்தவொரு கட்சியோ அல்லது தனிநபரோ நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக பிபிசி அறிக்கை குற்றம்சாட்டவில்லை.

இத்தகைய கட்சிகள் 'பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள்' சுறுக்கமாக ஆர்யூபிபி (RUPP) என்று அழைக்கப்படுகின்றன.

ஆர்யூபிபி கட்சிகளைப் பற்றி நாங்கள் பிபிசி விசாரித்தபோது, நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் நன்கொடைகளைப் பெறுவதையும், அதே சமயம் தேர்தல்களில் ஒன்று அல்லது இரண்டு வேட்பாளர்களை மட்டுமே - அதுவும் எப்போதாவது ஒருமுறை மட்டுமே - களமிறக்குவதையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

மேலும் பிபிசி புலனாய்வில் தெரியவந்தது என்ன? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு