நேபாளத்தில் மீண்டும் வெள்ளம் - ஆற்றில் சரிந்து விழுந்த அரசு கட்டடம்
நேபாளத்தில் மீண்டும் வெள்ளம் - ஆற்றில் சரிந்து விழுந்த அரசு கட்டடம்
பிரசுரிக்கப்பட்டது
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள புதிய வெள்ளப் பெருக்கால், நிலைத் தன்மையற்ற ஆற்றங்கரையில் இருந்த நகராட்சிக் கட்டடம் ஒன்று ஆற்றுக்குள் சரிந்து விழுந்தது.
ஞாயிற்றுக் கிழமை நடந்த இந்தச் சம்பவத்தை அங்கு இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். கட்டடம் ஆற்றில் விழுந்தபோது, அதற்குள் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
கடந்த மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 1,400 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் இன்னும் காணாமல் போயுள்ள நிலையில், புதிய வெள்ளத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



