காணொளி: நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்கள் - சிசிடிவியில் பதிவான காட்சி

காணொளிக் குறிப்பு, காணொளி: நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்கள் , சிசிடிவியில் பதிவான காட்சிகள்
காணொளி: நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்கள் - சிசிடிவியில் பதிவான காட்சி
பிரசுரிக்கப்பட்டது

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில், 16-ஆம் எண் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்து ஒன்று நடந்துள்ளது. காவல்துறையினர் தெரிவித்த தகவலின்படி, கார் ஒன்று அதிவேகமாக வந்துகொண்டிருந்தபோது, மொபெட் ஒன்று திடீரென சாலையின் குறுக்கே வந்துள்ளது. அதன் மீது மோதுவதைத் தவிர்க்க முயன்ற கார், எதிர்ப்புறச் சாலையில் சென்றுகொண்டிருந்த மற்றொரு கார் மீது பலமாக மோதியது. அதே நேரத்தில், பின்னால் வந்துகொண்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனமும் இந்த விபத்தில் சிக்கியது.

காக்கிநாடா மாவட்டம், கந்தேபள்ளி மண்டலத்தில் உள்ள நீலாத்ரிராயுடுபேட்டை புறநகர்ப் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு காரில் பயணித்தவர்கள் பலத்த காயமடைந்தனர். தகவல் கிடைத்ததும் காவல்துறையினரும் நெடுஞ்சாலைப் பணியாளர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கந்தேபள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவநாகபாபு தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு