திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகேயுள்ள தூணின் பின்னணி
திருப்பரங்குன்றம் மலையில் தர்காவுக்கு அருகில் அமைந்துள்ள தூண், நில அளவைக் கல் என தமிழ்நாடு அரசின் நிலஅளவைத் துறை மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை இணைந்து நடத்திய ஆய்வறிக்கை கூறுகிறது.
அந்தக் கல், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிலப்பரப்பை அளப்பதற்காக அமைக்கப்பட்டதுன்னு தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அவை அமைக்கப்பட்டது தொடர்பா தமிழ்நாடு அரசின் ஆய்வறிக்கையில சொல்லப்பட்டவற்றை பார்ப்போம்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள மலை உச்சியில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா உள்ளது.
'தர்காவுக்கு அருகில் உள்ள தூணில் கார்த்திகை நாளில் தீபம் ஏற்றலாம்' என கடந்த ஜனவரி மாதம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது.
தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரிய தமிழ்நாடு அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'ஒருமுறை மட்டும் தீபம் ஏற்றிக் கொள்ளலாம்'னு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவில், தமிழ்நாடு அரவோட நிலஅளவை மற்றும் தீர்வைகள் துறை மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆகியவை இணைந்து தயாரித்த 2026 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வருவாய்த்துறை பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆய்வறிக்கையை வெளியிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதில், சிக்கந்தர் பாதுஷா தர்காவுக்கு அருகில் அமைந்துள்ள கல் தூண், நில அளவைக் கல் எனவும் தர்காவுக்கு கீழே அமைந்துள்ள இடமே 'விளக்கு ஏற்றும் தூண்' எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வரைபடமும் ஆய்வறிக்கையில கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள ஜிடிஎஸ் நிலையத்தில் இருந்து நாகமலை, சதுரகிரி, கோபால்சுவாமி மலை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பொன்னுருக்கி மலை மற்றும் பெருமாள் மலை உள்ளிட்ட இடங்களில் எடுக்கப்பட்ட முக்கோண அளவீடுகளும் பிரிட்டிஷ் காலத்தில் உள்ள ஜிடிஎஸ் தொடர்பான அறிக்கையில் உள்ள மதிப்புகளோடு ஒத்துப் போவதாகவும் ஆய்வறிக்கையில குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கோணவியல் அளவை என்பது ஓர் அடிப்படைக் கோட்டில் இருந்து பரந்த நிலப்பரப்பு முழுவதும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட முக்கோணங்களால் உருவாக்கப்படுவதைக் குறிக்கிறது.
ஆங்கிலேயர் காலத்து தூண்களோட தற்போதைய நிலை குறித்தும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'ஆவணப்படுத்தப்படுத்தப்பட்ட 63 கல் தூண்களில் சுமார் 19 தூண்கள் எண்ணெய் ஊற்றும் தூண்களாகவும் 19 தூண்கள் வழிபாட்டில் உள்ளதாகவும் 19 தூண்கள் கோவில்களுக்குள்ளும் அமைந்துள்ளன. சில தூண்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்தியா முழுக்க நடந்த கிரேட் டிரிகோணமெட்ரிக் சர்வே பணிகள் சென்னையில் இருக்கற செயின்ட் தாமஸ் மவுண்ட்டுல தான் முதன்முதல்ல தொடங்குச்சு.
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் 33வது காலாட்படையைச் சேர்ந்த வில்லியம் லாம்ப்டன், 1802 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் முக்கோணவியல் அளவீட்டுப் பணிகளை தொடங்கினார். 1841 ஆம் ஆண்டு வரை இந்தப் பணிகள் நடந்தன.
மிகவும் மேம்பட்ட அளவீட்டு முறைகளில் ஒன்றாக அந்தக் காலத்தில் இவை பார்க்கப்பட்டன. இந்தப் பணிகளுக்கு நாடு முழுவதும் ஆங்கிலேய குழுவினர் சுற்றியபோது பல உயிர்கள் பலி கொண்டதாக, தமிழ்நாடு அரசின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
லாம்ப்டனுக்கு ஜார்ஜ் எவரெஸ்ட் இந்தத் திட்டத்தை முன்னெடுத்தார். சென்னை செயின்ட் தாமஸ் மவுன்டில் தொடங்கிய இந்தப் பயணம் இமயமலையில் முடிந்ததாக, தமிழ்நாடு அரசின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



