'டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது' – விஜயை சாடிய பழனிசாமி
'டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது' – விஜயை சாடிய பழனிசாமி
பிரசுரிக்கப்பட்டது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தேர்தல் பிரசாரத்தின் போது முதலமைச்சர் விஜய் டிராக்டர் ஓட்டியதை கடுமையாக விமர்சித்தார்.
தான் 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சொந்தத் தோட்டத்தில் பெரிய மற்றும் சிறிய டிராக்டர்களைப் பயன்படுத்தி விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், வெறும் டிராக்டரை இயக்குவதால் மட்டுமே ஒருவர் உண்மையான விவசாயியாகிவிட முடியாது என்றும் அவர் கூறினார். விவசாய பெருமக்களின் தேவைகளை உணர்ந்து அவர்களுக்கான நலத்திட்டங்களையும் உதவிகளையும் செய்து தருவதே உண்மையான விவசாயச் சிந்தனை என்றும், விளம்பரத்திற்காக டிராக்டர் ஓட்டுபவர்களின் கனவு கானல் நீராகத்தான் போகும் என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



