காணொளி: பேரிடர் காலத்தில் பாதுகாப்பான தங்குமிடங்களை அமைப்பது எப்படி?
ஈரப்பதம் உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், முடிந்தவரை உலர்வாக வைத்திருங்கள்.
மழைநீர் தேங்கும் இடத்தில் தங்குமிடம் அமைக்காதீர்கள்.
கொசுக்கள், பூச்சிகளை தவிர்க்க, தங்குமிடத்தைச் சுற்றி தேங்கும் தண்ணீரை அகற்றுங்கள்.
போர்வைகள் மற்றும் உபயோகப் பொருட்களைத் தொடர்ந்து வெயிலில் காய வையுங்கள்.
தங்குமிடத்தில் நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
தங்குமிடத்துக்குள் அடுப்பு அல்லது ஹீட்டரை பயன்படுத்தும்போது, எரியும் செயல்முறையின்போது உருவாகும் நச்சுத்தன்மை கொண்ட கார்பன் மோனாக்சைட் வாயுவால் ஏற்படும் ஆபத்து குறித்து முன்கூட்டியே அறிந்துகொள்ளுங்கள்.
அடுப்பு அல்லது ஹீட்டரில் பிளாஸ்டிக் அல்லது ரப்பரை எரிக்காதீர்கள். இவை குறிப்பாக நச்சுத்தன்மை கொண்ட புகையை உருவாக்கும்.
தங்குமிடத்துக்குள் புகை தேங்காமல் வெளியேறும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
ஹீட்டரை ஆன் செய்து வைத்தபடியே தூங்காதீர்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



