நேபாள வெள்ளம்: இடிந்த வீடுகளிடையே உறுதியாக நின்ற பச்சை நிற வீடு - பால்கனியில் நின்றவர்கள் என்ன ஆனார்கள்?
பிபிசி வெரிஃபைட் செய்தியாளர் சார்லோட் கிரீன் பகிர்ந்த தகவல்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
நேபாளத்தில் வெள்ளம் சூழ்ந்த ஒரு பச்சை நிற கட்டடத்தில் மக்கள் தஞ்சமடைந்திருந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வீடியோ நேபாளத்தின் பிதூரில் இருந்து எடுக்கப்பட்டது.
வெள்ள நீரின் வேகமான ஓட்டம் நகரத்தின் பெரும் பகுதிகளை அழித்தது அல்லது அடித்துச் சென்றது.
புதன்கிழமை எடுக்கப்பட்ட அந்த கட்டடத்தின் முதல் காணொளியை பிபிசி வெரிஃபைட் உறுதி செய்துள்ளது.
வெள்ளம் உச்சத்தில் இருந்தபோது, வலுவான நீரோட்டங்களையும் பெரிய அலைகளையும் எதிர்த்து அந்தக் கட்டடம் உறுதியாக நிற்பதை அந்த வீடியோ காட்டியது.
தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் அதற்குள் தஞ்சம் அடைவதும் வீடியோவில் காணப்படுகிறது.
வலுவான நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்ட மற்ற கட்டடங்கள் மற்றும் வாகனங்களின் இடிபாடுகளும் அந்தக் கட்டடத்தின் மீது மோதுவது வீடியோவில் காணப்பட்டது. வெள்ள நீர் கட்டடத்தை எல்லாப் பக்கங்களிலிருந்தும் சூழ்ந்திருந்தது.
மற்றொரு காணொளி, வெள்ளம் தொடங்கிய இடத்திலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அந்த பச்சை நிற வீடு, சுற்றியுள்ள பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டிருந்த போதிலும், கிட்டத்தட்ட சேதமடையாமல் இருப்பதைக் காட்டியது.
சரிபார்க்கப்பட்ட காணொளி, வெள்ள நீர் வடிந்த பிறகு, உயிர் பிழைத்த சிலர் ஒரு பால்கனியில் நிற்பதையும், அவர்களுக்குப் பின்னால் சேறும் சகதியும் இடிபாடுகளும் இருப்பதையும் காட்டுகிறது. மாடியில் இருந்த ஒருவர், உதவிக்காகக் கூக்குரலிடுவது போல, சிவப்புத் துணியை அசைத்துக் கொண்டிருப்பதும் காணப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



