காணொளி: சீனாவில் பெய்த கனமழையால் வீதிகளில் தேங்கிய தண்ணீர்

காணொளி: சீனாவில் பெய்த கனமழையால் வீதிகளில் தேங்கிய தண்ணீர்
பிரசுரிக்கப்பட்டது

வடமேற்குப் பகுதியில் உள்ள ஷான்சி மாகாணத்தின் யுலின் நகரில் ஞாயிற்றுக்கிழமை கடுமையான இடியுடன் கூடிய வானிலை நிலவியது. இதனால் பல மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

இதற்கிடையில், சுய்டே கவுண்டியில் பெய்த கனமழையால் பல சாலைகள் கடுமையாக வெள்ளத்தில் மூழ்கின. சில வாகனங்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பல மாவட்டங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து மற்றும் பயணங்கள் பாதிக்கப்பட்டன.

யுலின் நகரின் சில பகுதிகளில் திங்கள்கிழமையும் இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை தொடரக்கூடும் என உள்ளூர் வானிலைத் துறை எச்சரித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு