You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: "டெல்லி கேபிட்டல்ஸை துவம்சம் செய்த ஆர்சிபி" - யோமஹேஷ்
ரசிகர்கள் ரன்மழையை எதிர்பார்த்துக்கொண்டிருக்க, ஆர்சிபி பௌலர்கள் அதிரடியாக வீசிய பந்துவீச்சில் டெல்லி அணிக்கு மிக கடுமையான ஆட்டமாக இருந்தது. 75 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது அந்த அணி.
புவனேஷ்வர் குமார் மற்றும் ஜாஷ் ஹேசில்வுட் வீசிய அபாரமான ஸ்பெல்லில் அவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தார்கள். முதல் 23 பந்துகளிலேயே 6 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. அதுவும் 8 ரன்களுக்கு. அந்த இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் வீசிய ஓவர்களில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் பவர்பிளே ஸ்கோர் 13/6. ஐபிஎல் தொடரின் 19 ஆண்டுகால வரலாற்றில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச பவர்பிளே ஸ்கோர் இதுதான்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு