காணொளி: தர்மேந்திர பிரதான் ராஜிநாமா மோதி அரசுக்கு பின்னடைவா?

காணொளிக் குறிப்பு, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகலைக் கொண்டாடும் இளைஞர்கள்
காணொளி: தர்மேந்திர பிரதான் ராஜிநாமா மோதி அரசுக்கு பின்னடைவா?
பிரசுரிக்கப்பட்டது

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடந்து வந்த போராட்டத்தைத் தொடர்ந்து பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஒரு போராட்டத்தின் காரணமாக தனது அமைச்சரவையில் இருந்த அமைச்சர் ஒருவர் பதவியைத் துறக்க நேரிட்டது இதுவே முதல் முறை என்பதால் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா மோதி அரசுக்கு ஒரு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பும் பல சந்தர்ப்பங்களில் எதிர்க் கட்சிகள் மத்திய அரசு மற்றும் அதன் அமைச்சர்கள் மீது பல்வேறு விவகாரங்களில் அழுத்தம் கொடுத்திருக்கின்றன. ஆனால் அதன் தாக்கம் பெரியளவில் இருந்ததில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு