காணொளி: இராக் மேகங்களை அமெரிக்கா திருடியதா?

காணொளி: இராக் மேகங்களை அமெரிக்கா திருடியதா?

இராக் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா அல்-கைகானி, அண்டை நாடுகளான துருக்கியும் இரானும், விமானங்களைப் பயன்படுத்தி "மேகங்களை உடைக்கவும்" மற்றும் "திருடவும்" அமெரிக்கா எடுக்கும் முயற்சிகள் குறித்து "புகார் அளித்துள்ளதாக" கூறினார்.

எந்த ஆதாரத்தையும் முன்வைக்காமல், அமெரிக்கா இரானில் "போரில் மும்முரமாக" இருப்பதால், "சமீபத்திய நாட்களிலும் மாதங்களிலும் இராக்கிற்கு மழை திரும்பியுள்ளது" என்று அவர் கூறினார்.

மனிதர்கள் மேகங்களைத் "திருட" அனுமதிக்கும் எந்தத் தொழில்நுட்பமும் இதுவரை இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.