You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: உங்கள் செல்போனில் வந்த எச்சரிக்கை செய்தி-பின்னணி இதுதான்
இன்று இந்தியா முழுவதும் பலரது மொபைல் போன்களில் திடீரென பலத்த ஒலியுடன் ஒரு எச்சரிக்கை குறுஞ்செய்தி பெறப்பட்டது. அந்தக் குறுஞ்செய்தியில் பேரிடர்கள் குறித்த உடனடி அறிவிப்புகளை குடிமக்களுக்கு வழங்க, உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியா ஒரு Cell Broadcast சேவையைத் தொடங்கியுள்ளது.
இச்செய்தியைப் பெற்றதும், பொதுமக்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. இது ஒரு சோதனைச் செய்தி" என குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னதாகவே, இது தொடர்பான அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டிருந்தது.
இன்று எச்சரிக்கை குறுஞ்செய்தி வந்தது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, எதிர்காலத்தில், இதன் மூலம் பேரிடர் அல்லது அவசர காலங்களின்போது, அந்தந்தப் பகுதி மொழியிலும் இருப்பிடத்திற்கு ஏற்றவாறும் உடனடி எச்சரிக்கைகளை அனுப்ப இயலும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், குடிமக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பேரிடர் காலங்களில் விரைவான தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்யவும் இது முக்கிய முன்னெடுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு