You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பாலியல் குற்றம் உறுதியாகியும் சிறை இல்லையா? பாதிக்கப்பட்ட சிறுமி குமுறல்
பிரிட்டனின் ஹாம்ப்ஷயரில் வசிக்கும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பதின்ம வயது சிறுமி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்களைப் பார்த்து "பயப்படாமல்" வீட்டை விட்டு வெளியேறும் சூழல் தனக்கு வேண்டும் என்று பிபிசியின் விக்டோரியா டெர்பிஷயரிடம் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 2024, ஜனவரி 2025 ஆகிய மாதங்களில் நடந்த தனித்தனி சம்பவங்களில், அப்போது 15 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகள், 14 வயதுடைய இரு சிறுவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.
இரண்டாவது தாக்குதலில் ஈடுபட்டதற்காக, அப்போது 13 வயதிருந்த மற்றொரு சிறுவனும் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இவர்கள் மூவருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்படவில்லை. அந்த மூன்று சிறுவர்களுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தச் சிறார்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரங்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் சர் கியர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு