You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விபரீதத்தில் முடிந்த 'வெயில் தற்காப்பு ஐடியா'
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் கலூராம் ரெபாரி என்ற இளைஞர், வெயிலில் இருந்து தன்னை பாதுகாக்க ஒரு பால் கேன்-ஐ தன் தலையில் வைத்துக்கொண்டார். ஆனால் அது அவரது தலையிலே சிக்கிக்கொண்டது.
அவரது ஒரு காணொளி சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. கலூராம் ரெபாரி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபொது, அவரை ஒருவர் படம்பிடித்து, அதை சமூக ஊடகங்களில் பதிவேற்றினார்.
அந்த பால் கேனை அவரது தலையில் இருந்து எடுக்க கிராம மக்கள் நீண்ட நேரம் முயற்சி செய்தனர்.
பின்னர், ஒரு இயந்திரம் கொண்டு அந்த பால் கேன் வெட்டி எடுக்கப்பட்டது.
அந்த பால் கேன் அவரது தலையில் சுமார் இரண்டு மணி நேரம் சிக்கி இருந்தது.
இது ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு முன்பு நடந்த சம்பவம் என்றும் காலுராம் ராய்பாரி இப்போது நலமாக உள்ளார் என்றும கிராம தலைவரின் பிரதிநிதி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு