காணொளி: நகரும் ரயிலுக்கு அடியில் படுத்து குழந்தையை காப்பாற்றிய தந்தை

காணொளி: நகரும் ரயிலுக்கு அடியில் படுத்து குழந்தையை காப்பாற்றிய தந்தை

வங்கதேசத்தில் ரயில் நிலைய நடைமேடையில் இருந்து ஒரு குழந்தை எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் தவறி விழுந்தது. குழந்தையை காப்பாற்ற முயன்ற தந்தை, நடைமேடைக்கும் தண்டவாளத்துக்கும் இடையிலான குறுகிய இடைவெளியில் குழந்தையை அணைத்தபடி இருந்தார். ரயில் கடந்து சென்ற பிறகு, அங்கிருந்த பொதுமக்கள் அவர்கள் இருவரையும் மீட்க உதவினர். இருவருக்கும் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு