தேவா திடீர் மரணம்: கடைசி நேரத்தில் என்ன நடந்தது? மகன் விளக்கம்
அண்ணாமலை, பாட்ஷா உள்பட சுமார் 400க்கும் மேலான படங்களின் இசையமைப்பாளர் தேவா காலமானார். கடைசி நேரத்தில் அவருக்கு என்ன நடந்தது என்பதை அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா செய்தியாளர்களிடம் கூறினார். அதனை இந்த வீடியோவில் காணலாம்.
அதேநேரத்தில், தேவா இறப்பு குறித்து தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கியபோது,, "அவரை அழைத்து வரும்போதே மயக்க நிலையில்தான் அழைத்து வரப்பட்டார். அவருக்கு நாடித் துடிப்போ, இதயத் துடிப்போ எதுவுமே இல்லை. வரும்போதே மயக்க நிலையில்தான் அழைத்து வரப்பட்டார். வீட்டில் முதலுதவி வழங்கியுள்ளார்கள்" என்று தெரிவித்தார்.
மேலும், "மருத்துவமனைக்கு அழைத்து வந்த பிறகு உடனடியாக வென்டிலேட்டர், சிபிஆர் உள்பட கொடுக்க வேண்டிய சிகிச்சைகளை வழங்கினோம். சர்வதேச தரத்திலான முதலுதவிகளை வழங்கினோம். ஆனால் அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. 1.5 மணிநேரம் வரை முயன்றோம். பல்துறை மருத்துவர்கள் இணைந்து சிகிச்சை அளித்தார்கள். எவ்வளவு முயன்றும் இதயத் துடிப்பை மீட்டு உயிர்ப்பிக்க முடியவில்லை" என்று தெரிவித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



