காணொளி: ஏசியில் இருந்த 5 கொம்பேறி மூக்கன் பாம்புகள்

காணொளிக் குறிப்பு,
காணொளி: ஏசியில் இருந்த 5 கொம்பேறி மூக்கன் பாம்புகள்
பிரசுரிக்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்துல் வகாப் என்பவரின் வீட்டில் ஏசி இயங்கிக் கொண்டிருந்தபோது, அதன் துளையில் இருந்து பாம்பு ஒன்று வெளியே வந்துள்ளது. இது தொடர்பாக திருக்கோவிலூர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் ஏசியின் இன்டோர் யூனிட்டை அகற்றி சோதனை செய்தனர்.

அப்போது, அதில் 5 கொம்பேறி மூக்கன் பாம்புகள் இருப்பது தெரியவந்தது. ஏசியின் இண்டோர் யூனிட்டுக்கு செல்லும் துளை சரியாக மூடப்படாததால், அந்த வழியாக பாம்புகள் உள்ளே புகுந்தது தெரியவந்தது.

பாம்புகளை பிடித்த மீட்புக் குழுவினர், அவற்றை பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர்.

ஏசி உள்ளிட்ட சாதனங்களை பொருத்தும்போது, வெளிப்புறத்தில் இருந்து வீட்டிற்குள் செல்லும் துளைகளை முறையாக மூடி வைக்க வேண்டும் என தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தினர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு