காணொளி: பாகிஸ்தான் எல்லையில் கொத்தடிமையாக இருந்த காணாமல் போன மகனை 23 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த தாய்
காணொளி: பாகிஸ்தான் எல்லையில் கொத்தடிமையாக இருந்த காணாமல் போன மகனை 23 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த தாய்
பிரசுரிக்கப்பட்டது
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரி, பிழைப்புக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் கோவைக்கு குடிபெயர்ந்தார். அவரது மூத்த மகன் பிரகாசம், 2003-ஆம் ஆண்டு, 16 வயதில் வீட்டில் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு வெளியேறி காணாமல் போனார். காவல்துறையில் புகார் அளித்தும், பல ஆண்டுகள் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம், திருப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் முத்தையா மூலம், பிரகாசம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் இருப்பது தெரியவந்தது. அப்போது தான், 23 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகன் உயிருடன் இருப்பதை சுந்தரி அறிந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



