You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பாகிஸ்தானை ஆபிரகாம் ஒப்பந்தத்தில் இணைக்க முயற்சிக்கும் அமெரிக்கா
டிரம்புடன் நல்லுறவைத் தொடர விரும்பும் பாகிஸ்தானுக்கு, பாலத்தீன விவகாரம் முக்கிய உள்நாட்டு அரசியல் பிரச்னையாக உள்ளது. எனவே, ஆபிரகாம் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளையும் உள்நாட்டு அரசியலையும் சமநிலைப்படுத்துவது சவாலாக இருக்கலாம்.
தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் ஆபிரகாம் ஒப்பந்தங்களில் சேரும் வாய்ப்பு மிகவும் குறைவு என பத்திரிகையாளர் இரம் அப்பாசி கருதுகிறார். பாகிஸ்தானில் மத அமைப்புகள் கொண்டுள்ள வலுவான செல்வாக்கு காரணமாக, எந்த அரசாங்கமோ அல்லது ராணுவமோ இத்தகைய நடவடிக்கையை எடுப்பது மிகவும் கடினம் என்று அவர் வாதிடுகிறார்.
அதே நேரத்தில், சௌதி அரேபியா போன்ற நாடுகள் இஸ்ரேலுடன் உறவுகளை இயல்புநிலைக்குக் கொண்டுவர முயற்சித்தால், அது பாகிஸ்தானுக்கு மேலும் சிக்கலான அரசியல் மற்றும் தூதரக நிலையை உருவாக்கக்கூடும் என்றும் அவர் கருதுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு