You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: முதலமைச்சராக விஜயின் முதல்நாள் - நகர்வுகள், சர்ச்சைகள் மற்றும் எதிர்வினைகள் என்ன?
தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
முதலமைச்சராக பதவியேற்ற விஜய் முதல் கையெழுத்தாக 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பேசும்போது, அரசின் கஜானாவை முந்தைய அரசுகள் மோசமான நிலையில் வைத்துச் சென்றுவிட்டன என்று விமர்சித்தார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்வினையாற்றி உள்ளார்.
அதோடு, தன்னோடு இருப்பவர்களுக்கும் ஓர் எச்சரிக்கை செய்தியை கூறியுள்ளார்.
இந்த நிலையில் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது தொடர்பாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
பதவியேற்புக்கு பின் விஜய் பேசியது என்ன? சர்ச்சை மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்வினை என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு