You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: "நிஷாந்த் மரணத்திற்கு நீதி வேண்டும்": மனைவி கூறுவது என்ன?
ஓமன் நாட்டின் டுக்ம் துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த எம்டி செலஸ்டியல் என்ற கப்பலில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நிஷாந்த் உயிர்த்த நாதன் (35 வயது) என்ற இரண்டாம் நிலை அதிகாரி, உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார் என ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
ஆனால், முறையான மருத்துவ வசதிகள் கிடைக்காத காரணத்தாலும், கப்பல் நிறுவனத்தின் அலட்சியத்தாலும் கடந்த ஜூன் 11ஆம் தேதி மாலை நிஷாந்த் உயிரிழந்துள்ளார் என இந்தியாவில் உள்ள மாலுமிகள் மற்றும் கப்பல் பணியாளர்கள் சங்கமான எப்எஸ்யூஐ (FSUI) தெரிவித்துள்ளது.
நிஷாந்தின் உடலைப் பாதுகாக்க போதுமான குளிரூட்டும் வசதிகள் கப்பலில் இல்லாததாலும், மூன்று நாட்களைக் கடந்துவிட்டதால் உடல் அழுகத் தொடங்கிவிட்டதாகவும், எக்ஸ் தளத்தில் எப்எஸ்யூஐ பகிர்ந்துள்ள ஒரு காணொளியில் எம்டி செலஸ்டியல் கப்பலின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு