டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் அரங்கேறிய காட்சிகள் - புகைப்படத் தொகுப்பு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்ட உடனே மேசைகளுக்கு கீழே தஞ்சமடைந்த விருந்தினர்கள்
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
வெள்ளை மாளிகை நிருபர்களுக்கு வழங்கப்பட்ட விருந்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில், அங்கு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதை தொடர்ந்து அவர் அங்கிருந்து மீட்கப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபரை அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அதிகாரி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து அங்கு நிலவிய சூழல் தொடர்பான புகைப்படங்கள் சில...
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்பாக விருந்தின் தொடக்க நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்து கொண்டபோது
பட மூலாதாரம், Indrani Basu / BBC News
படக்குறிப்பு, விருந்தில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள் மற்றும் அதிகாரிகள்
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்ட பிறகு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவை மேடையிலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்ற அதிகாரிகள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, விருந்து அரங்கில் கூச்சல் குழப்பம் நிலவியதில் ஒருவர் நாற்காலி மீது ஏறிச் சென்றார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, துணை அதிபர் ஜேடி வான்ஸ் விருந்து அரங்கிலிருந்து அதிகாரிகளால் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அந்த அரங்கில் இருந்த அரசு அதிகாரிகளால் பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்களால் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, விடுதியிலிருந்து வெளியேறிய டிரம்ப் அவரது பாதுகாப்பு அணிவகுப்பில் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
பட மூலாதாரம், Donald Trump
படக்குறிப்பு, சந்தேக நபர் எனக் குறிப்பிட்டு டிரம்ப் வெளியிட்ட புகைப்படம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வெள்ளை மாளிகைக்கு திரும்பிய டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, கலிஃபோர்னியாவில் உள்ள சந்தேக நபரின் இல்லத்தில் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.