காணொளி: திருப்பரங்குன்றம் தீபம் பற்றிய கேள்விக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்
மதுரை அழகர் கோவில் சாலை பகுதியிலுள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் அனைத்துதுறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
அவர் கூறுகையில், "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தெளிவாக கூறியிருக்கிறோம் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். இரண்டு வருடத்திற்கு முன்பாக எந்த சூழல் இருந்ததோ அதுவே தொடர வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள். மக்கள் அமைதியைத்தான் விரும்புகிறார்கள். இதுதான் அரசின் கொள்கையும் எந்த மாற்றும் கருத்தும் கிடையாது.
பெரும்பாலான மக்கள் இரண்டு 2 வருஷத்துக்கு முன்பாக என்ன இருந்ததோ அந்த அமைதியான சூழல்தான் வேண்டும் என நினைக்கிறார்கள். அதுவே தொடர வேண்டும் என அரசு நினைக்கிறது. இரண்டு வருஷத்துக்கு/ பத்து வருஷத்துக்கு முன்பாக என்ன சூழல் இருந்ததோ அதே நிலை தொடர வேண்டும் அனைவரும் நினைக்கிறோம். எந்த மதவாத சக்திகளும் உள்ளே வந்து அரசியல் செய்ய 100% அனுமதிக்க மாட்டோம்" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



