காணொளி: குஜராத் இசை நிகழ்ச்சியில் கலைஞர்கள் மீது 'பணமழை'

காணொளி: குஜராத் இசை நிகழ்ச்சியில் கலைஞர்கள் மீது 'பணமழை'
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தில் நடந்த லோக் டைரா எனப்படும் ஒரு நிகழ்ச்சியில் கலைஞர்கள் மீது ரூபாய் நோட்டுகள் கொட்டப்பட்டன. ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து பணம் 'மழையென பொழியப்பட்டதாக' நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். சௌராஷ்டிரா பகுதிகளில் லோக் டைரா நிகழ்ச்சிகளில் இவ்வாறு பணத்தை வாரி இறைக்கும் மரபு பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் நன்கொடையாக சேகரிக்கப்படும் இந்த பணம் சமூக சேவை பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு