பதிலளிக்காத மோதி, இந்திய தரப்புடன் செய்தியாளர் வாக்குவாதம் - நார்வேயில் இரு நிகழ்வுகளிலும் என்ன நடந்தது?

நார்வே, இந்தியா, மோதி, பத்திரிகையாளர் சந்திப்பு, வாக்குவாதம்

பட மூலாதாரம், X/@Narendramodi

படக்குறிப்பு, நார்வே பிரதமருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நார்வேயில் நடைபெற்ற இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பில், பத்திரிகையாளர் ஒருவருக்கும் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

முன்னதாக, நார்வே பிரதமர் ஜோனாஸை சந்தித்த பிறகு, நார்வே பத்திரிகையாளர் ஒருவர் பிரதமர் மோதியிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றதாகத் தெரிகிறது.

இந்த இரு சம்பவங்களும் இந்தியாவில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் மெஹுவா மொய்த்ரா உள்ளிட்ட பலர் இதற்கு எதிர்வினையாற்றியுள்ளனர்.

செய்தியாளர் சந்திப்பின் போது, நார்வே பத்திரிகையாளர் ஒருவர், இந்தியாவில் நடப்பதாகக் கூறப்படும் 'மனித உரிமை மீறல்கள்' மற்றும் பிரதமர் நரேந்திர மோதி 'கடினமான கேள்விகளை எதிர்கொள்ளாமல் இருப்பது' தொடர்பான கேள்வியை இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்தியாவை ஒரு "சிறந்த நாடு" என்றும், "பழமையான நாகரிகத்தைக் கொண்ட நாடு" என்றும் குறிப்பிட்டதோடு, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியா "பல நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கியது" என்றும், இத்தகைய முயற்சிகளின் காரணமாகவே "ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நம்புகிறது" என்றும் தெரிவித்தது.

பின்னணி என்ன?

சி.பி. ஜார்ஜ் இதைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, அந்தப் பத்திரிகையாளர் மீண்டும் அவரை இடைமறித்து, நீங்கள் எனது கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றார்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், உங்கள் கேள்வியை நாங்கள் கேட்டுக்கொண்டோம், அதற்குப் பதிலளிப்போம் எனக் கூறியபோது, அதற்கு அந்த நார்வே பத்திரிகையாளர், எனக்கு இதற்கு உடனடியாகப் பதில் வேண்டும் என்று கூறினார்.

ஓஸ்லோவில் நடைபெற்ற இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பில், நார்வே பத்திரிகையாளர் ஒருவர், "இந்தியாவும் நார்வேயும் வலுவான கூட்டாண்மையை உருவாக்கி வருகின்றன. ஆனால் நாங்கள் ஏன் உங்களை நம்ப வேண்டும்? உங்கள் நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களை நிறுத்துவதாக நீங்கள் உறுதியளிக்கிறீர்களா? உங்கள் பிரதமர் எப்போது கடினமான கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தொடங்குவார்?" என்று கேட்டார்.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "உங்கள் கேள்வியை நாங்கள் கேட்டுக்கொண்டோம், அதற்குப் பதிலளிப்போம்" என்றார். அதற்கு அந்த நார்வே பத்திரிகையாளர், எனக்கு இதற்கு உடனடியாகப் பதில் வேண்டும் என்று கூறினார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பின்னர் அதே செய்தியாளர் சந்திப்பில், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலர் (மேற்கு) சி.பி. ஜார்ஜ் இக்கேள்விக்குப் பதிலளிக்கையில், "இந்தியா மிகவும் பழமையான ஒரு நாகரிகம். சுமார் ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான நாகரிகம். நாங்கள் பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தோம். நாங்கள் யோகாவைக் கண்டுபிடித்தோம்" என்றார்.

சி.பி. ஜார்ஜ் இதைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, அந்தப் பத்திரிகையாளர் மீண்டும் அவரை இடைமறித்து, நீங்கள் எனது கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றார்.

இதற்கு சி.பி. ஜார்ஜ், "இது எனது செய்தியாளர் சந்திப்பு. நீங்கள் கேள்வியைக் கேட்டுவிட்டீர்கள். இப்போது எனது பதிலைக் கேட்கும் பொறுமை உங்களுக்கு இருக்க வேண்டும்" என்றார்.

அதற்கு அந்தப் பத்திரிகையாளர், யோகா போன்றவற்றைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்று கூறினார்.

பின்னர் சி.பி. ஜார்ஜ், "நான் நம்பிக்கையைப் பற்றிப் பேசுகிறேன். ஒட்டுமொத்த உலகமும் கோவிட் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தபோது, நாங்கள் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளையும் மருந்துகளையும் வழங்கினோம். ஒட்டுமொத்த உலகமும் இந்த நெருக்கடியிலிருந்து மீள நாங்கள் உதவினோம். உலகம் எங்கள் மீது நம்பிக்கை வைத்தது. இதுதான் நம்பிக்கை" என்றார்.

மனித உரிமை மீறல்கள் குறித்த தனது கேள்விக்கு நேரடியாகப் பதில் அளிக்க வேண்டும் என்று அந்தப் பத்திரிகையாளர் மீண்டும் மீண்டும் குறுக்கிட்டார்.

இதற்குப் பதிலளித்த சி.பி. ஜார்ஜ், இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டைக் குறிப்பிட்டு, "ரஷ்யா-யுக்ரேன் போரின் கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், இந்தியா அதனை ஏற்பாடு செய்து, அனைத்து நாடுகளையும் ஒரே மேடையில் ஒன்றிணைத்தது. இந்தியா அனைவரையும் ஒன்றிணைத்ததுடன், முதல் முறையாக ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி20-யின் நிரந்தர உறுப்பினராக ஆக்குவதிலும் வெற்றி கண்டது" என்றார்.

"ஆப்பிரிக்க நாடுகளின் கவலைகளுக்கு இந்தியா ஒரு தளத்தை வழங்கியுள்ளது. இதுதான் நம்பிக்கை" என்றும் அவர் கூறினார்.

சி.பி. ஜார்ஜ் பதிலளித்துக் கொண்டிருந்த போதே அந்தப் பத்திரிகையாளர் செய்தியாளர் சந்திப்பில் இருந்து வெளியேறினார்.

மோதியிடம் நார்வே பத்திரிகையாளர் கேட்ட கேள்வி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

பட மூலாதாரம், Anindito Mukherjee/Bloomberg via Getty Images

படக்குறிப்பு, பிரதமர் 'பதற்றத்தில் தப்பி ஓடுகிறார்' என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

முன்னதாக வெளியான காணொளி ஒன்றில், நார்வே பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோதி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றபோது, ​​ஒரு நார்வே பத்திரிகையாளர் அவரிடம் கேள்விகள் கேட்பது காணப்பட்டது.

அந்தக் காணொளியில், பத்திரிகையாளர் ஹெய்லி லிங், "பிரதமர் மோதி, உலகின் மிகவும் சுதந்திரமான ஊடகங்களின் கேள்விகளுக்கு நீங்கள் ஏன் பதிலளிப்பதில்லை?" என்று கேட்பதைக் கேட்க முடிகிறது.

பின்னர், இந்தக் காணொளியைப் பகிர்ந்த ஹெய்லி லிங், "இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி எனது கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. இதை நான் எதிர்பார்க்கவில்லை. உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் நார்வே முதல் இடத்திலும், இந்தியா 157-வது இடத்திலும் உள்ளன" என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பிறகு, அவரது பதிவுக்குப் பதிலளிக்கும் விதமாக, நார்வேயில் உள்ள இந்தியத் தூதரகம் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டது. அதில், "தூதரகம் ஒரு செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்வதாகவும், அதில் அவர் வந்து தனது கேள்விகளைக் கேட்கலாம்" என்றும் தெரிவித்தது.

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தக் காணொளியைக் குறிப்பிட்டு, பிரதமர் "பயந்து அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார்" என்று குற்றம் சாட்டினார்.

"மறைப்பதற்கு எதுவும் இல்லாதபோது, பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஒரு சில கேள்விகளுக்குப் பயந்து சமரசம் செய்துகொண்ட ஒரு பிரதமர் வெளியேறுவதை உலகம் பார்க்கும்போது, அது இந்தியாவின் பிம்பத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது?" என்றார்.

திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மெஹுவா மொய்த்ரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "அன்புள்ள ஹெய்லி லிங். இந்தியாவின் எதிர்க்கட்சிகள் மற்றும் லட்சக்கணக்கான இந்தியர்கள் சார்பாக உங்களுக்கு நன்றி. எங்களுடைய ஊடகங்கள் தொடர்ந்து செய்யத் தவறிய ஒன்றை நீங்கள் செய்திருக்கிறீர்கள். அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்டு, பொறுப்புக்கூறலைக் கோரியிருக்கிறீர்கள். பத்திரிகையாளர் சந்திப்பு அல்லது செய்தியாளர் மாநாடு என அவற்றின் பெயரில் தான் வித்தியாசம் உள்ளது. பதில்களும் இல்லை, உண்மையும் இல்லை" என்று பதிவிட்டார்.

பிரதமர் மோதி ஐந்து நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்குச் சென்ற பிறகு அவர் நார்வே சென்றடைந்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு