வெனிசுவேலா நிலநடுக்கம்: தரைமட்டமான கட்டடங்கள், நிலைகுலைந்த மக்கள் - பேரழிவை உணர்த்தும் படங்கள்

வெனிசுவேலா நிலநடுக்கம்
படக்குறிப்பு, வெனிசுவேலாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

வெனிசுவேலாவில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம், 1900-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நாட்டில் பதிவான மிக வலுவான நிலநடுக்கம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டைத் தாக்கிய முதல் நிலநடுக்கம் 7.2 என்ற அளவாகப் பதிவானது. அதைத் தொடர்ந்து ஒரு நிமிடத்துக்குள் 7.5 என்ற அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் நிலநடுக்கப் பட்டியலின்படி, கடந்த 1900-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி வெனிசுவேலா கடற்கரைக்கு அருகில் 7.7 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை வெனிசுவேலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட கராகஸ் மற்றும் பிற பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற அச்சம் மற்றும் சேதமடைந்த கட்டடங்கள் இடிந்து விழலாம் என்ற பயத்தால், பலர் சாலைகளில் கூடாரங்களை அமைத்துத் முகாமிட்டு தங்கத் தொடங்கியுள்ளனர்.

வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக உள்ள டெல்சி ரோட்ரிக்ஸ் கூறுகையில், கராகஸின் வடக்கே உள்ள லா கைரா மாநிலமே நிலநடுக்கத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அங்கு "டஜன் கணக்கான" கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அந்தப் பகுதியை அவர் "பேரிடர் மண்டலம்" என்று தெரிவித்துள்ளார்.

32 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் தகவல்கள் குறித்துப் பேசிய இடைக்கால அதிபர், "இந்த எண்ணிக்கையில் லா கைரா மாநிலத்தில் இருந்து வரக்கூடிய தகவல்கள் இன்னும் சேர்க்கப்படவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கும் சில புகைப்படங்கள்:

வெனிசுவேலா நிலநடுக்கம்
படக்குறிப்பு, நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள இடிபாடுகள் தெருக்களில் விழுந்துள்ளன.
வெனிசுவேலா நிலநடுக்கம்
படக்குறிப்பு, வலென்சியாவில், உள்ளூர் அதிகாரி ஒருவர் இடிந்து விழுந்த கட்டடத்தைப் பார்வையிடுகிறார்.
வெனிசுவேலா நிலநடுக்கம்
படக்குறிப்பு, வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 'ஹோட்டல் எட்வார்ட்ஸ்' நிலைகுலைந்து காணப்படும் காட்சி.
வெனிசுவேலா நிலநடுக்கம்
படக்குறிப்பு, சான் பெர்னார்டினோவில் மீட்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
வெனிசுவேலா நிலநடுக்கம்
படக்குறிப்பு, நிலநடுக்கத்துக்குப் பிறகு கராகஸில் இடிந்து விழுந்த கட்டடத்தின் இடத்தில் அவசர கால மீட்புப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெனிசுவேலா நிலநடுக்கம்
படக்குறிப்பு, நிலநடுக்கத்தால் சேதமடைந்த குடியிருப்புகளில் சிதறிக்கிடந்த மக்களின் உடமைகள்
வெனிசுவேலா நிலநடுக்கம்
படக்குறிப்பு, நிலநடுக்கத்தால் தலைநகர் கராகஸில் வெளியேறிய மக்கள் இரவு நேரத்தை திறந்தவெளியில் கழித்தனர்.
வெனிசுவேலா நிலநடுக்கம்
படக்குறிப்பு, நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான லா கைராவில், இடிந்து விழுந்த கட்டடத்தின் சிதைவுகள்.
வெனிசுவேலா நிலநடுக்கம்
படக்குறிப்பு, இடிபாடுகளால் உடைமைகளை இழந்தோர், சோகத்தோடு திறந்தவெளியில் அமர்ந்திருந்தனர்.
புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, கராகஸில் இடிபாடுகளுக்குள் மீட்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
படக்குறிப்பு, புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, கராகஸில் இடிபாடுகளுக்குள் மீட்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்புப்படையினர்.
படக்குறிப்பு, கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்புப்படையினர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தெருக்களில் கூடாரம் அமைத்து தங்கி வருகின்றனர்.
படக்குறிப்பு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தெருக்களில் கூடாரம் அமைத்து தங்கி வருகின்றனர்.
வெனிசுவேலா நிலநடுக்கம்
படக்குறிப்பு, வெனிசுவேலாவின் லா கைராவில் எரியும் கட்டடம்.
வெனிசுவேலா நிலநடுக்கம்
படக்குறிப்பு, நிலநடுக்கத்தால் பலசரக்குக் கடையில் சிதறிக்கிடந்த பொருட்கள்
வெனிசுவேலா நிலநடுக்கம்
படக்குறிப்பு, நிலநடுக்கத்தால் கைக்குழந்தையுடன் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்த குடும்பம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு