நீலகிரி: வேட்டையாடிய நாயை தூக்கிச் செல்ல சிறுத்தை வந்த காட்சி
எச்சரிக்கை: இந்த காணொளி சங்கடம் தரலாம்
இந்தக் காட்சியில் சிறுத்தை ஒன்று பதுங்கிப் பதுங்கி நகர்ந்து வருவதைப் பார்க்க முடிகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள எஸ். கைகாட்டி குடியிருப்புப் பகுதியில் இந்தக் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்புற வேலியில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை சிறுத்தை கொன்றதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், அந்த நாயின் உடலை எடுத்துச் செல்ல முயன்ற சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியுள்ளது.
காருக்குள் இருந்த ஒருவர் இந்தக் காட்சியைத் தனது செல்போனில் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
நாயின் உடலை எடுத்துச் செல்வதற்கு முன்பு சிறுத்தை அங்கும் இங்கும் சுற்றி, பதுங்கிப் பதுங்கி நகர்வதையும் அந்தக் காட்சிகளில் காண முடிகிறது.
குடியிருப்புப் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறும் அப்பகுதி மக்கள், சிறுத்தையை உடனடியாகக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



