குஜராத்தில் 5 பேரை தாக்கிய சிங்கம் பிடிபட்டது எப்படி?

காணொளிக் குறிப்பு, 5 பேரை தாக்கிய சிங்கம் கூண்டில் சிக்கியது எப்படி?
குஜராத்தில் 5 பேரை தாக்கிய சிங்கம் பிடிபட்டது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தின் அம்ரேலி பகுதியில் 5 பேரை தாக்கிய பெண் சிங்கம் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது.

அம்ரேலி மாவட்டம் வடியாவின் அர்ஜன்சுக் மற்றும் தோரி கிராமங்களில், இந்த சிங்கம் 12 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து நடத்திய தாக்குதல்களில் ஐந்து பேர் காயமடைந்தனர். அதிகாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த இருவர் மீது சிங்கம் தாக்குதல் நடத்தியது. அதன்பிறகு, குடியிருப்பு பகுதிக்கு அருகில் ஒரு விவசாயி மீதும் சிங்கம் தாக்குதல் நடத்தியது.

தகவல் அறிந்தவுடன் வனத்துறைக் குழுவினர் விரைந்து சென்று சிங்கத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறை ஊழியர் அனிருத் வாலா மீதும் சிங்கம் தாக்குதல் நடத்தியது. அவரது கையில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அம்ரேலி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதோடு மற்றொருவரையும் சிங்கம் தாக்கியது.

சிங்கத்தின் தொடர் தாக்குதல்களை அடுத்து, வனத்துறையின் 6 முதல் 8 குழுக்கள் களமிறங்கின. முழு பகுதியையும் சுற்றி வளைத்து சிங்கத்தின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. இறுதியில் சுமார் 12 மணி நேர தொடர் போராட்டத்திற்குப் பிறகு, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி சிங்கத்தைப் பிடித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு