'ஜோசியர் பேச்சை சீரியஸாக எடுக்க வேண்டாம்' - மாணிக்கம் தாகூர்

காணொளிக் குறிப்பு, காணொளி: ஜோசியர்களின் பேச்சை சீரியஸாக எடுக்கவேண்டாம் - மாணிக்கம் தாகூர்
'ஜோசியர் பேச்சை சீரியஸாக எடுக்க வேண்டாம்' - மாணிக்கம் தாகூர்
பிரசுரிக்கப்பட்டது

தமிழக முதல்வர் மற்றும் தவெக தலைவர் விஜய், 2029 ஆம் ஆண்டு நாட்டின் அடுத்த பிரதமர் ஆவார் என்று தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் "ராகுல் காந்தி தான் விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார்" என்ற தவெக எம்.எல்.ஏ கனிமொழியின் பேச்சு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது "யாரோ ஒரு ஜோசியர் சொல்வதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளதேவையில்லை " என்று மாணிக்கம் தாகூர் பதிலளித்தார்.

கனிமொழி கூறியது அவரது சொந்த கருத்துதான் அது கட்சியின் கருத்து அல்ல என தவெக பொருளாளர் வெங்கடரமணன் தெரிவித்திருப்பதாகவும் தாகூர் தெரிவித்தார்.

தமிழகத்தில் விஜய் முதல்வர், டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி அரசு அமையவேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு