காணொளி: முரசொலி மாறன் பற்றி முதலமைச்சர் விஜய் பேசியதற்கு திமுக எதிர்ப்பு
காணொளி: முரசொலி மாறன் பற்றி முதலமைச்சர் விஜய் பேசியதற்கு திமுக எதிர்ப்பு
பிரசுரிக்கப்பட்டது
''முரசொலி மாறன் குடும்பத்தை சேர்ந்த நிறுவனம் தயாரித்த திரைப்படத்தில் நடித்து பணம் வாங்கிய முதலமைச்சர் விஜய் தற்போது அவரைப் பற்றி கொச்சைப்படுத்தி பேசவேண்டிய அவசியம் என்ன?'' என்று திமுக கொறடா எ.வ. வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையிலிருந்து அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாக திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எ.வ. வேலு, விதிகளுக்கு புறம்பாக அமலாக்கத்துறை விசாரணையிலுள்ள வழக்குகளை பற்றி முதலமைச்சர் அவையில் பேசியதாகவும், மிசா போராட்டத்தை கொச்சைப்படுத்தியதாகவும், சர்க்காரிய கமிஷன் அறிக்கையை படித்தது தவறு என்றும் கூறி அவற்றை அவைக்குறிப்பிலிருந்து நீக்கும்படி கோரியதாக தெரிவித்தார். ஆனால் அவற்றை நீக்க அவைத் தலைவர் மறுத்துவிட்டதாக எ.வ.வேலு கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



