காணொளி: பாதி வழியில் நின்ற ரோலர் கோஸ்டர் - ஒருவர் உயிரிழப்பு

காணொளிக் குறிப்பு, பாதி வழியில் நின்ற ரோலர் கோஸ்டர்; ஒருவர் உயிரிழப்பு
காணொளி: பாதி வழியில் நின்ற ரோலர் கோஸ்டர் - ஒருவர் உயிரிழப்பு
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டர் பாதி வழியில் திடீரென நின்ற சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.

ஏபிசி செய்தி நிறுவனத்தின் உள்ளூர் இணை நிறுவனமான WSB-TV வெளியிட்ட டிரோன் காட்சிகளில், நின்றுபோன ரோலர் கோஸ்டரில் இருந்து பயணிகளைப் பூங்கா ஊழியர்கள் படிக்கட்டுகள் வழியாகக் கீழே அழைத்துச் செல்வது பதிவாகியுள்ளது. சம்பவ இடத்தில் அவசரகால மீட்புக் குழுவினரும் இருந்தனர்.

"பூங்காவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தால் மிகுந்த வருத்தமடைந்துள்ளதாக" பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த நபர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து அதிகாரிகள் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இதுதொடர்பாக உள்ளூர் காவல்துறை, தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் பூங்கா நிர்வாகத்திடம் பிபிசி விளக்கம் கேட்டுள்ளது.

இது தொடர்பாக கோப் கவுண்டி காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக, பிபிசியின் அமெக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு