'விஜய் பிரதமர் வேட்பாளர்': செய்தியாளர் கேள்விக்கு தினகரன் பதில்
"2026-ன் மிகப்பெரிய ஜோக்" – தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு டிடிவி தினகரன் கொடுத்த பதில்.
அண்மையில் த.வெ.க அமைச்சர்கள் பலரும் முதலமைச்சர் ஜோசப் விஜயை "வருங்கால பி.எம்" என மையப்படுத்திப் பேசி வருகின்றனர். ஆகஸ்ட் 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் அமைச்சர் சரத்குமார், "நாளை இந்தியாவின் பி.எம் விஜய்" எனக் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
விருதுநகரில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, "இன்றைய சி.எம், நாளை பி.எம். வருங்காலத்தில் நம்முடைய ஆட்சி மட்டுமே இருக்கும்" எனக் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மேடை ஒன்றில் பேசும்போது, "முதலமைச்சர் எங்கே போனாலும் அவர் மீது ஃபோகஸ் இருக்கும். நாளை டெல்லியே கூட அவராக இருக்கலாம்" எனக் குறிப்பிட்டார். இதற்கு மத்தியில் டிடிவி தினகரனிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



