You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: டிரம்ப் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு - கைதான சந்தேக நபர்
அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற வெள்ளை மாளிகை நிருபர்களுடான விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்ட சில நொடிகளில் அங்கிருந்த ரகசிய சேவை அதிகாரிகளால் அதிபர் டிரம்ப் மேடையில் இருந்து உடனடியாக மீட்கப்பட்டார்
டிரம்ப் உடன் அவரின் தலைமை ஆலோசகர் ஸ்டிபன் மில்லர் உட்பட பல மூத்த அதிகாரிகளும் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவை ரகசிய சேவை அதிகாரிகள் மேடையிலிருந்து அழைத்துச் சென்றதாக பிபிசியின் அமெரிக்க கூட்டு ஊடக நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கிறது.
இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கருதப்படும் சந்தேக நபரின் படத்தையும், துப்பாக்கிச்சூடு தொடங்கியதாக தோன்றும் காட்சிகளையும் அதிபர் டிரம்ப் பகிர்ந்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு