காணொளி: ஆந்திராவில் திருநர்களே கட்டி அவர்களே நிர்வகிக்கும் 'அர்த்தநாரீஸ்வரர் கோவில்'

காணொளிக் குறிப்பு,
காணொளி: ஆந்திராவில் திருநர்களே கட்டி அவர்களே நிர்வகிக்கும் 'அர்த்தநாரீஸ்வரர் கோவில்'
பிரசுரிக்கப்பட்டது

ஆந்திராவின் விஜயநகரத்தில் உள்ள இந்தக் கோவில், திருநர்களால் கட்டப்பட்டு, அவர்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது. இந்தக் கோவிலின் சூழல் பிற கோவில்களில் இருந்து மாறுபட்டதாக உள்ளது. இங்குள்ள பூசாரி ஒரு திருநங்கை. இதன் நிர்வாகக் குழு முழுக்க முழுக்க திருநர்களையே கொண்டுள்ளது.

இக்கோவில் பூசாரிகளாகப் பணியாற்றும் திருநர்கள், இப்பணிகளை மேற்கொள்வதற்காக சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளதாகக் கூறுகின்றனர்.

நிர்வாகக் குழு, தாங்கள் ஈட்டும் வருவாயைக் கொண்டே கோவில் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளைச் செய்து வருவதாகக் கூறுகிறது.

இந்தக் கோவில் தையல் பயிற்சி வழங்குவதுடன், பயிற்சி பெறுவோர் வேலைவாய்ப்பைப் பெறவும் உதவுகிறது.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு