காணொளி: ஆர்டெமிஸ்-2 பயணம் நிறைவு - விண்கலம் பசிபிக் கடலில் விழுந்த காட்சி
காணொளி: ஆர்டெமிஸ்-2 பயணம் நிறைவு - விண்கலம் பசிபிக் கடலில் விழுந்த காட்சி
சாதனை பயணத்துக்கு பின் ஆர்டெமிஸ் 2 குழு பூமி வந்தடைந்த தருணம்
நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் ஓரியான் விண்கலம், மனிதர்களை நிலவுக்கு அருகே அனுப்பும் 10 நாள் விண்வெளி பயணமாக இந்த மாத தொடக்கத்தில் புறப்பட்டது. இந்தக் குழுவில் 4 பேர் இருந்தனர்.
விண்வெளியில் மனிதர்கள் இதுவரை பயணித்திராத தொலைவை (4,06,771 கி.மீ) எட்டி இந்தக் குழு சாதனை படைத்திருந்தது.
தற்போது ஆர்டெமிஸ்-2 குழு பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியது. இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை சுமார் 5.37 மணிக்கு அமெரிக்கா அருகே பசிபிக் பெருங்கடலில் திட்டமிட்டபடி குழுவினர் இறங்கினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



