தாலிபன் ஆட்சியில் விவாகரத்துக்கான 18 வயது பெண்ணின் போராட்டம்

காணொளிக் குறிப்பு, தாலிபன் ஆட்சியில் விவாகரத்துக்கான 18 வயது பெண்ணின் போராட்டம்
தாலிபன் ஆட்சியில் விவாகரத்துக்கான 18 வயது பெண்ணின் போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது

தாலிபனின் மூத்த உறுப்பினர்களை சந்தித்துப் பேசுவதற்கு பிபிசிக்கு அரிதான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, கிளர்ச்சியாளர்களாக இருந்த வெளியாட்கள் தற்போது அரசாங்கத்தின் அங்கமாகியுள்ளனர்.

இவர் ஆளுநர் அப்துல்லா சர்ஹாதி. தாலிபன்களால் மிகவும் மதிக்கப்படும் மற்றும் போற்றப்படும் நபர்.

அவரது அன்றாட சந்திப்புகளில், 18 வயதான ஒரு பெண்ணின் விவாகரத்து தொடர்பான பிரச்னையும் அடங்கும்.

அவரது அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக, அவரது பேச்சுக்கு வேறு ஒருவர் குரல் கொடுத்துள்ளார்.

இஸ்லாமிய சட்டப்படி, பெண் ஒருவர் விவாகரத்து கோரினால், அவருடைய கணவரால் வழங்கப்பட்ட வரதட்சணையை மீண்டும் அவருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கலாம்.

தாலிபன் ஆட்சியில், இதற்கு பெரும்பாலும் கணவரின் சம்மதம் தேவைப்படுகிறது.

கணவர் கேட்ட 30,000 டாலர்களை அப்பெண்ணின் குடும்பம் தருவதற்கு மறுத்துவிட்டது. இதன்பின், அப்பெண் அவருடைய கணவருடன் செல்ல வேண்டும் என ஆளுநர் கூறியுள்ளார்.

பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாக கூறப்படுவதை தாலிபன் மறுத்துள்ளது. இஸ்லாமியச் சட்டம் குறித்த தங்களது விளக்கத்தின் அடிப்படையில் பெண்களுக்கு உரிமைகள் இருப்பதாக தாலிபன் கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு