காணொளி: அமெரிக்காவில் விமான விபத்து - பயணிகளை மீட்ட மக்கள்

காணொளி: அமெரிக்காவில் விமான விபத்து - பயணிகளை மீட்ட மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை தனியார் ஜெட் விமானம் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் சிக்கியிருந்த பயணிகளை மீட்க அங்கிருந்த மக்களும் அவசர கால பணியாளர்களும் விரைந்து சென்றனர். விமானத்தில் இருந்த 6 பேரில் ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். உயிர் தப்பிய ஐந்து பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு