You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஹோர்மூஸ் நீரிணையில் சிக்கித் தவிக்கும் மாலுமிகளை மீட்கத் தயாராகும் ஐ.நா
இரானுக்கு எதிரான அமெரிக்கா - இஸ்ரேல் போரினால் வளைகுடா பகுதியில் சிக்கித் தவிக்கும் 11,000க்கும் மேற்பட்ட மாலுமிகளை வெளியேற்ற ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பு தயாராகி வருகிறது.
இந்த "பெரிய அளவிலான மீட்பு நடவடிக்கை" இரான், ஓமன், அமெரிக்கா, பிராந்தியத்தின் பிற கடலோர நாடுகள் மற்றும் கடல்சார் தொழில்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் சர்வதேச கடல்சார் அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர்செனியோ டொமிங்கஸ் தெரிவித்தார்.
பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு உத்தரவாதங்களும் பெறப்பட்டுள்ளதுடன், கடற்பயணத்திற்கான சூழ்நிலைகளும் முழுமையாக சரிபார்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு