காணொளி: கல்லறைகளுக்கு நடுவே சாப்பாடு மேஜை - பிரபலமாகும் லக்கி உணவகம்

காணொளி: கல்லறைகளுக்கு நடுவே சாப்பாடு மேஜை - பிரபலமாகும் லக்கி உணவகம்

ஒரு கல்லறையின் அருகே அமர்ந்து தேநீரோ, சிற்றுண்டியோ சாப்பிடுமாறு யாரிடமாவது கேட்டால், அவர்கள் சங்கடமாக உணரக்கூடும். ஆனால் ஆமதாபாத்தில், மக்கள் கல்லறைகளுக்கு நடுவே அமர்ந்து தேநீரையும் சிற்றுண்டிகளையும் ரசித்துச் சாப்பிடும் ஓர் உணவகம் உள்ளது.

இந்த இடத்தின் தனிச்சிறப்பு அதன் வரலாற்றில் அடங்கியுள்ளது. இந்த நிலத்தை அதன் உரிமையாளர் கே.ஹெச்.முகமது வாங்கியபோதே, இங்கு ஒரு கல்லறைத் தோட்டம் அமைந்திருப்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அது தெரிந்திருந்தும், அவர் இங்கு ஒரு தேநீர் கடையை அமைத்தார். கல்லறைகளை அகற்றுவதற்குப் பதிலாக, அவை இருந்த நிலையில் அப்படியே விட்டுவிட்டார். அவர் கல்லறைகளின் நாலாபுறமும் தடுப்புகளை அமைத்துவிட்டு, எஞ்சியிருந்த இடங்களில் மக்கள் அமர்வதற்கான இருக்கைகளை ஏற்பாடு செய்தார்.

இந்த உணவகத்தின் ஊழியர்கள் தினமும் காலையில் இந்தக் கல்லறைகளைச் சுத்தம் செய்து, அங்கு புதிய மலர்களைச் சமர்ப்பிக்கின்றனர். காலப்போக்கில், மக்களும் இந்த இடத்தை ஏற்றுக் கொண்டனர். தற்போது பலர் இங்கு வருகை தருகின்றனர். படிப்படியாக, இது நகரத்திலேயே பிரபலமான இடமாக உருவெடுத்துள்ளது.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு