காணொளி: இலங்கை செம்மணி மனிதப் புதைகுழி; மீட்கப்பட்ட 583 எலும்புகள் பற்றிய ஆய்வறிக்கையால் சர்ச்சை எழுவது ஏன்?

காணொளிக் குறிப்பு, செம்மணி மனிதப் புதைகுழி: 583 எலும்புக்கூடுகள் தொடர்பான புதிய அறிக்கையால் சர்ச்சை
காணொளி: இலங்கை செம்மணி மனிதப் புதைகுழி; மீட்கப்பட்ட 583 எலும்புகள் பற்றிய ஆய்வறிக்கையால் சர்ச்சை எழுவது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையின் யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட 583 எலும்புக்கூடுகள் தொடர்பாகத் தொல்லியல் நிபுணர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்த புதிய இடைக்கால ஆய்வறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 19ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு காரணமாக உயிரிழந்தவர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும், சில எச்சங்கள் முறையான இறுதிச் சடங்குகள் நடைபெற்றதற்கான அறிகுறிகளைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், உயிரிழப்புக்கான காரணம், காலம் உள்ளிட்டவை உறுதிப்படுத்தப்படவில்லை.

2025ஆம் ஆண்டு சமர்ப்பித்த முந்தைய அறிக்கையில் குற்றவியல் சம்பவங்களுக்கான தடயங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்த நிலையில், புதிய அறிக்கை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதப் படுகொலைகள் நடந்திருக்கலாம் என அவர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

இதற்கிடையே, செம்மணி புதைகுழி தொடர்பான வாக்குமூலத்தை மீண்டும் பெறவும், தடயவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கார்பன் மற்றும் டிஎன்ஏ பரிசோதனைகளை விரைவுபடுத்தவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு