காணொளி: விலங்குகளின் கொம்புகளில் கலை வடிவம் காணும் சம்பல் கலைஞர்கள்

காணொளி: விலங்குகளின் கொம்புகளில் கலை வடிவம் காணும் சம்பல் கலைஞர்கள்

உத்தர பிரதேசத்தின் சம்பல் நகரில் அமைந்துள்ள குறுகிய சந்துகளில் ஒலிக்கும் சுத்தியல்களின் எதிரொலி பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு கைத்தொழிலுக்கு சாட்சியாகத் திகழ்கிறது.

இங்கு ஒரு காலத்தில் வேட்டைக்காரர்கள் விலங்குகளின் கொம்புகளை நீரைச் சேமிக்கப் பயன்படுத்தினர். காலப்போக்கில், கைவினைஞர்கள் இந்தக் கொம்புகளைச் செதுக்கி, அவற்றில் கலைநயம் மிக்க வடிவங்களைப் பொறிக்கத் தொடங்கினர்.

இன்று, இந்தக் கைத்தொழில் உலகம் முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போது, சம்பலில் விலங்குகளின் கொம்புகள் மற்றும் எலும்புகளில் இருந்து செதுக்கப்படும் கலைப் பொருட்கள், இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளைச் சென்றடைகின்றன.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு