காணொளி: விரட்டிய வளர்ப்பு நாயை திருப்பித் துரத்திய காட்டு யானை

காணொளிக் குறிப்பு,
காணொளி: விரட்டிய வளர்ப்பு நாயை திருப்பித் துரத்திய காட்டு யானை
பிரசுரிக்கப்பட்டது

தேயிலை தோட்டத்துக்குள் வந்த காட்டு யானையை வளர்ப்பு நாய் ஒன்று துரத்தி சென்ற காட்சி இது.

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெல்லியாம்பதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் நடந்த இந்த சம்பவம் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

துரத்திய நாயை, யானையும் திரும்பிச் சென்று துரத்தியது. பின்னர், அருகிலிருந்த வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது .

இந்த தேயிலை தோட்டம் உள்ள பகுதியில் தற்போது பலாப்பழங்கள் பழுக்கத் தொடங்கியுள்ளதால், அவற்றின் மணத்தால் ஈர்க்கப்பட்டு காட்டு யானைகள் அடிக்கடி இந்தப் பகுதிக்கு வருவதால், எஸ்டேட் ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு