காணொளி: இரானில் தொடங்கிய அயதுல்லா அலி காமனெயியின் இறுதி அஞ்சலி ஊர்வலங்கள்

காணொளிக் குறிப்பு, காமனெயிக்கு பொதுத் துக்க அனுசரிப்பைத் தொடங்கிய இரான்
காணொளி: இரானில் தொடங்கிய அயதுல்லா அலி காமனெயியின் இறுதி அஞ்சலி ஊர்வலங்கள்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உயிரிழந்த இரானின் முன்னாள் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயிக்கு, சுமார் நான்கு மாதங்கள் கழித்து, பொது துக்க அனுசரிப்புகளையும் இறுதி அஞ்சலி ஊர்வலங்களையும் இரான் தொடங்கியுள்ளது.

காமனெயிக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இரானை 37 ஆண்டுகள் வழிநடத்திய காமனெயியின் உடல் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்கள், தெஹ்ரானில் உள்ள பெரிய மண்டபம் ஒன்றில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மதகுருமார்கள், அரசு அதிகாரிகள், வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் அங்கு வந்து மரியாதை செலுத்தினர்.

இரானின் மிகப் புனிதமான யாத்திரைத் தலமாகக் கருதப்படும் மஷ்ஹாத் நகரில் காமனெயியின் உடல் அடுத்த வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு