காணொளி: சட்டப்பேரவை சபாநாயகரானார் ஜேசிடி பிரபாகர்

காணொளி: சட்டப்பேரவை சபாநாயகரானார் ஜேசிடி பிரபாகர்

தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வானார்.

ஜேசிடி பிரபாகர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்றவர் ஆவார். சபாநாயகராக ஆவதற்கான வேட்பு மனுவை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் நேற்று அவர் வழங்கினார்.

வேறு யாரும் போட்டியிடாத சூழலில் அவர் இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் அவரது இருக்கையில் அமரவைத்தனர்

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு